“இலங்கைக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே செல்லுங்கள்” என பிரான்ஸ் அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பை மாற்றியுள்ளது. அவசரகால சட்டம் இன்றோடு(18.08) முடிவுக்கு வரும் நிலையிலும், நாட்டில் பிரச்சினைகள் எதுவுமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள நிலையிலும் பிரான்ஸ் அரசாங்கம் இந்த போக்குவரத்த்து தளர்வை அறிவித்துள்ளது.
இலங்கை பயணிக்கும் போது உயர் அவதானமாக செயற்படுமாறும், ஒன்று கூடுதல்கள் மற்றும் அரசியல் ஒன்று கூடல்களில் பங்கெடுப்பதனை தவிர்க்குமாறும் தமது நாட்டு மக்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கைக்கான சுற்றுலா திட்டங்களை செயற்படுத்துமாறு சுற்றுலா முகவர் நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ள பிரான்ஸ் அரசாங்கம், சிறந்த இடங்களில் தங்குமாறும், எரிபொருள் சிக்கலை தவிர்த்துக் கொள்ள சுற்றுலாவுக்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை பாவிக்குமாறும் மேலும் அறிவுறுத்தியுள்ளது.