இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று சிம்பாவே, ஹராரேயில் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகளடங்கிய தொடரின் முதற் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்றுக்கு முற்தினம் (18/08) ஹராரேயில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதில் அணித்தலைவர் ரெகிஸ் சகபாவா 35(51) ஓட்டங்களையும், ரிச்சர்ட் நகர்வா 34(42) ஓட்டங்களையும், பிரட் எவன்ஸ் ஆட்டமிழக்காமல் 33(29) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அக்ஷர் படேல், பிரசித் கிருஷ்ணா, தீபக் சஹார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 192 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷுப்மன் கில் 82(72) ஓட்டங்களையும், ஷிகர் தவான் 81(113) ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தியா அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகனாக தீபக் சஹார் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று (20/08) மதியம் 12:45 இற்கு ஹராரே இல் ஆரம்பமாகவுள்ளது.