யாழ்பாணத்தைக்கு இரயில் பயணித்தார் அமைச்சர் பந்துல

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை சென்றுள்ளார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவையில் இன்றைய மதியம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை – கொழும்பு புகையிரத சேவையை மேம்படுத்துவது, மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்துடன், இரவு தபால் சேவையின் மீள் ஆரம்பம், அறிவியல் நகர், சாவகச்சேரி நிலையங்களில் உத்தரதேவி ரயில்சேவை தரித்து நிற்கும் என இந்த சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

Social Share

Leave a Reply