ஆசிய கிண்ணம் இன்று ஆரம்பம்

ஆசிய கிண்ணம் 2022 கிரிக்கெட் தொடர் இன்று ஐக்கிய அரபு இராட்சியம் டுபாயில் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை நேரப்பபடி இரவு 7.30 இற்கு ஆரம்பிக்கவுள்ள போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில் இந்த தொடர் நடைபெறுகிறது. இலங்கையின் மோசமான பொருளாதார சிக்கல் நிலை காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த தொடர் ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

14 தடவைகள் நடைபெற்றுள்ள ஆசிய கிண்ண தொடரில் இந்தியா 7 தடவைகளும், இலங்கை 5 தடவைகளும், பாகிஸ்தான் 2 தடவைகளும் கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளன. ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்ற இறுதி தொடரில் இந்தியா அணி வெற்றி பெற்று நடப்பு சம்பியனாக இந்த தொடரில் களமிறங்குகிறது.

இலங்கை அணி பலமாக காணப்படும் நிலையிலும், ஆப்கானிஸ்தான் அணி 20-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு குழுக்களில் 3 அணிகள் முதல் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களை பெறும் அணிகளும் தமக்குள்ள விளையாடி முதலிரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவுள்ளன.

Social Share

Leave a Reply