ஆசிய கிண்ணம் – உலகமே எதிர்பார்க்கும் போட்டி

-டுபாயிலிருத்து விமல்-

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்று வருகிறது. இன்று டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின்னர் இரு அணிகளும் மோதுவதனால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் அதிகமாக ஐக்கிய அரபு இராட்சசியத்தில் காணப்படுகின்றனர். அதேவேளை இந்தியர்கள் ஏரளாமாக ஐக்கிய அரபு இராட்சியத்திலும், டுபாயிலும் காணப்படுகின்றனர். அதன் காரணமாக மைதானம் நிறையுமென்பது உறுதியாகிவிட்டது.

டிக்கெட்கள் முழுமையாக விற்று தீர்ந்துவிட்டது. அதிலும் டிக்கெட்டுகள் வழமையான போட்டி தொகையிலும் பார்க்க, அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக 400 டெர்காமுக்கு விற்பனை செய்யப்படும் உயர் பகுதி டிக்கெட் 6000 டெர்காமுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிக்கான ஏற்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தினை ஏற்பாட்டளர்கள் வழங்குவதனையும் அவதானிக்க முடிந்தது.

இந்தியாவின் 20-20 ஆதிக்கம் அண்மைக்காலமாகவே தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. பாகிஸ்தான் அணி பலமாகவே காணப்படுகிறது. இந்தியாவின் பலமான அதிரடியான துடுப்பாட்டம் இந்தியா அணியின் பலம். பந்துவீச்சில் புதியவர்கள் வருகை தந்தாலும் சிறப்பாகவே விளையாடுகின்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சு முழுமையாக பலமாக இல்லை. அதுவே அவர்களுக்கான சிக்கல். ஜஸ்பிரிட் பும்ரா அணியில் இல்லை. வேகப்பந்து வீச்சு புதியவர்களுடன் காணப்படுகிறது.

பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகின்றது. துடுப்பாட்டம் வழமையான அணியாகவே காணப்படுகிறது. பாபர் அசாமின் பலம் மிகவும் முக்கியமானது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு எப்போதும் போன்று பலமாகவே கண்ணப்படுகின்றது.

இரு அணிகளும் இன்று எவ்வாறு செயற்படவுள்ளன என்பதிலேயே வெற்றி/தோல்வி காத்திருக்கின்றது.

நேற்று மாலை இரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அக்கடமியில் பயிற்சிகளில் ஈடுபட்டனர். ரசிகர்கள் பலர் அணிகளை பார்வையிட அங்கு வந்திருந்தனர்.

வெப்பமான காலநிலை காணப்படுகிறது. மழைக்கான வாய்ப்புகள் எதுவம் இல்லை.

ஆசிய கிண்ண தொடரில் 20-20 போட்டிகள் மற்றும் 50 ஓவர்கள் போட்டிகள் இரண்டும் சேர்த்து 13 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. 8 – 5 என இந்தியா முன்னிலையில் காணப்படுகிறது.

யார் இன்று வெல்வார்கள் என முழு உலகமுமே இந்த போட்டிக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. டுபாய் நேரப்படி பிற்பகல் 6.00 மணி.

Social Share

Leave a Reply