வாரிசு திரைப்படத்தில் களமிறங்கும் பிரபல நடிகை

இயக்குனர் வம்சியுடைய இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு.
இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார்,பிரகாஷ்ராஜ்,பிரபு,குஷ்பூ,ஸ்ரீகாந்த்,ஷாம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

இதனை தொடர்ந்து  ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படத்தில்  தளபதி விஜய்யுடன் இணைந்து நந்தினி ராய் எனும் நடிகை நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply