அரச நிறுவனங்களின் தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய திட்டம்

அரச நிறுவனங்களின் தகவல்களை பொது மக்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதியதோர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் தகவல்களை தாமதமின்றி மக்களுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மூலம் அனைத்து அரசாங்க அமைச்சுக்களின் செயலாளர்களிற்கும் இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்காது உரிய தகவல்களை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply