இங்கிலாந்து ஏற்றுமதிகளுக்கு வரி சலுகைகள்

இலங்கை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஆட்சியொன்றை அமைப்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பிரித்தானிய பிரதமரான பொரிஸ் ஜோன்சனின் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

தொடர்ந்தும்  இலங்கைக்கு மேலும் ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இலங்கையானது பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ளும் போது பிரித்தானியா இலங்கையுடன் இணைந்து செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பல பொருட்களுக்கான வரிச்சலுகைகளை அதிகரிப்பதன் மூலம் உள்ளீடுகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு வாய்பளித்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து கூறி அனுப்பியிருந்த செய்தியில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

 

Social Share

Leave a Reply