செப்டெம்பர் 03 ஆம் 04 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந்த வலயங்களில் எதிர்வரும் 05 ஆம் திகதி, பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.