பண்டாரவளை ஹல்துமுல்ல – சன்வெளி தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி (Selfie) எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
வெலமிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞர் நேற்று மாலையில் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக நண்பர்கள் இருவருடன் சென்றிருந்த நிலையில் Selfie எடுக்க முற்பட்ட வேளையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பிரதேச மக்களும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.