உணவு நெருக்கடியுள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமையின் காரணமாக அவசர உதவிகள் தேவைப்படும் உணவு நெருக்கடியுள்ள 61,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா நேரடி பணப் பரிமாற்றங்களை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) தீர்மானித்துள்ளது.

வரலாறு காணாத உயர் பணவீக்கம் மற்றும் வருமான இழப்புக்கு மத்தியில் இலங்கையில் உணவு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் தனது இடைக்கால பாதீட்டு உரையில் 61000 வறிய குடும்பங்களுக்காக நான்கு மாத காலத்திற்கு தலா 10,000 ரூபா நிதியுதவி வழங்குவதற்காக திட்டத்தை அறிவித்தார்.

தொடர்ந்தும், உலக உணவு திட்டத்தின் கூற்றுப்படி நாட்டின் மக்கள் தொகையில் 33% அல்லது 7.15 மில்லியன் மக்கள் தற்போது தினசரி குறைந்தபட்ச ஊட்டச்சத்து தேவைக்கு குறைவான உணவை உட்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Social Share

Leave a Reply