தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இளம் அணியிடம் நாட்டை ஒப்படைக்குமாறு பாராளுமன்றத்தில் இன்று வேண்டுகோள் விடுத்தார்.
மாறுபட்ட கோணத்தில் புதிய பயணத்தை இளம் தரப்பினராலேயே மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியால் நாட்டு மக்களிடம் போஷாக்கின்மை ஏற்படும் நிலையை உருவாக்கி,அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீண்டும் ஒரு முறை புதிய அரசியல் நாடகத்தை கடந்த வாரம் ஆரம்பித்துள்ளதாகவும் அத்தகைய நபர்கள் இணைந்து மேலவை இலங்கை கூட்டணி எனும் பெயரில் புதிய கட்சியை உருவாக்கியுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.