இந்தியா, ஆப்கானிஸ்தான போட்டி ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகம், டுபாயில் ஆரம்பித்துள்ளது.

இரண்டாம் சுற்றில் இரு அணிகளும் தங்களது இறுதிப் போட்டிகளில் விளையாடுகின்றன. இரு அணிகளும் இறுதிப் போட்டியினை இழந்துள்ள நிலையில் இன்றைய போட்டி முக்கியத்துவம் அற்றதாக மாறியுள்ளது. போட்டியினை பார்வையிடவும் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே வருகை தந்துள்ளனர்.

இந்தியா அணி முக்கிய வீரர்களுக்கு ஓய்வினை வழங்கி லோகேஷ் ராகுலின் தலைமயில் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணி முழுமையான பலமான அணியுடன் களமிறங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இந்தியா அணியின் மாற்றம், ஆப்கானிஸ்தான் அணியின் கடந்த கால பெறுதிகள் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுமென்ற நிலையை உருவாக்கியுள்ளது.

அணி விபரம்

இந்தியா

1 லோகேஷ் ராகுல் (தலைவர்) 2 விராட் கோலி 3 ரிஷாப் பான்ட், 4 சூர்யகுமார் யாதவ், 5, டினேஷ் கார்த்திக் 6 அக்ஷர் பட்டேல் 7 தீபக் கூடா 8 புவனேஷ்வர் குமார், 9 ரவிச்சந்திரன் அஷ்வின் 10 தீபக் ஷகார் , 11 அர்ஷ்தீப் சிங்

ஆப்கானிஸ்தான்

1 ஹஸ்ரதுல்லா ஷசாய், 2 ரஹ்மானுல்லா குர்பாஸ், 3 இப்ராஹிம் சர்டான், 4 நஜிபுல்லா சர்டான் , 5 கரீம் ஜனட், 6 முகமட் நபி (தலைவர்), 7 ரஷீட் கான், 8 அஸ்மதுல்லா ஒமர்சாய், 9 பரீட் அஹமட் மாலிக், 10 முஜீப் ஊர் ரஹ்மான் 11 ஃபசல் ஹக் ஃபரூக்கி

Social Share

Leave a Reply