-டுபாயிலிருந்து ச.விமல்-
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகம், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டாம் சுற்றில் முதலிடத்தை பெற்ற இலங்கை அணியும், இரண்டாம் இடத்தை பெற்ற பாகிஸ்தான் அணியும் இந்தப் போட்டியில் மோதுகின்றன.
இலங்கை நேரப்பபடி 7.30 இற்கும், டுபாய் நேரப்பபடி 7.00 மணிக்கும் இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. போட்டியின் முன்னோட்டம் மற்றும், ஸ்கோர் விபரங்கள் உடனடி தகவல்களை மைதானத்தில் இருந்து நேரடியாக அறிந்து கொள்ள எமது இணைய தளத்தில் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.