5 வருட சேவையுடன் கூடிய சம்பளமற்ற விடுமுறை ஆசிரியர்கள் மற்றும் சுகாதர சேவை உத்தியோகஸ்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களுக்கு பொருந்தாது என என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தில் மேலதிகமாக உள்ள உத்தியோகஸ்தர்களுக்கே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு உரியவர்களுக்கு அல்ல எனவும் பொது சேவைகள் அமைச்சின் செயலாளர் M. M. P. K. மாயாதுன்ன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.