பா.உ களின் பேச்சுரிமையினை அரசாங்கம் நசுக்குகிறது – பீரிஸ்

நாட்டில் மட்டுமன்றி, பாராளுமன்றத்திலும் பேச்சுரிமையினை அரசாங்கம் நசுக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பினை வழங்கமால் தவிர்த்து வருவதாக பாராளுமன்றத்துக்கு வெளிப்புறத்தில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் மேலும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார்.

“இன்று தேசிய வருமானத்தை அதிகரிப்பது தொடர்பிலான திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. ஆனால் எமது திட்டங்களுக்கு பயந்து, அரசாங்கம் திட்டமிட்டு நாங்கள் பேச முடியாதவாறு தடை செய்துள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் பீரிஸ் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோடு நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“பாராளுமன்ற உறுப்பினர்களது அடிப்படை உரிமையும், பேச்சு உரிமையும் மீறப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பேசி பலனில்லை. இது பாராளுமன்றத்தின் ஜனநாயக உரிமையினை மீறும் செயற்பாடு” எனவும் மேலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

“இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் மோசமான இறுக்கமான கருத்து வெளியாகியுள்ளது. அத்தோடு பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பு, தெற்காசிய பாரளுமன்ற அமைப்பு ஆகியவற்றுக்கு இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது” எனவும் அவர் மேலும் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply