மத்திய ரஸ்சியா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு 20 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
லவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலையியலயே இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது. பாடசாலை சிறுவர்களும், பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் கொல்லப்பட்டுள்ளதாக ரஸ்சியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
1000 மாணவர்களும், 88 ஆசிரியர்களும் இருந்த பாடசாலையில் இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகளினால் துப்பாக்கிதாரி சுட்டுவிட்டு பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கான காரணங்கள் வெளியாகவில்லை.
சம்பவம் நடைபெற்ற பாடசாலை மத்திய அராசங்க கட்டிடடங்கள் பல அமைந்துள்ள இடமெனவும், சுமார் 650,000 குடியிருப்பாளர்கள் வாழுமிடமெனவுவம் ரஸ்யா ஊடங்கள் தெரிவித்துள்ளன.