மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி இன்று அதிகாலை இலங்கை கிரிக்கட் தலைமையகத்திலிருந்து கிளம்பி சென்றுள்ளது. ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்து 16 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஏழு அணிகள் இந்த தொடரில் பங்குபற்றுகின்றன. முதல் சுற்று போட்டிகளில் சகல அணிகளும் தங்களுக்குள் மோதவுள்ளன.
அணி விபரம்
சாமரி அத்தப்பத்து(தலைவி), ஹாசினி பெரேரா, ஹர்சிதா சமரவிக்ரமரட்ன, கவீஸா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஸ்கா சஞ்சீவனி, மல்ஷா ஷெஹானி, மதுஷிகா மெத்தானந்த, இனோகா ரனவீர, ராஷ்மி சில்வா, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, தரிக்கா செவ்வந்தி
இந்த அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஹஷான் திலகரட்ன பயிற்றுவிப்பாளராக செயற்படுகிறார்.