இலங்கைக்கு நமிபியா அதிரடி வழங்கியது

T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதற் போட்டி இலங்கை, நமிபியா அணிகளுக்கிடையில் நிறைவடைந்துள்ளது. நமிபியா அணி இந்தப் போட்டியில் 55 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நமிபியா அணியின் துடுப்பாட்டம சிறப்பாக அமைந்தமை இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சினை சிறப்பாக எதிர்கொண்டு நமிபியா துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாடினார்.

அவுஸ்திரேலியா ஜீலோங் இல் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

நமிபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது . இதில் ஜான் பிரைலிங் 44 ஓட்டங்களையும், JJ ஸ்மித் 31 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் 70 ஓட்டங்களை ஓட்ட இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பந்துவீச்சில் ப்ரமோட் மதுஷன் 2 விக்கெட்டைகளையும், சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க, டுஸ்மாந்த சமீரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பலமான பந்துவீச்சு என வர்ணிக்கப்படும் இலங்கை அணியினது பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு நமிபியா அணி பெற்ற ஓட்டங்கள் அவர்களது வெற்றிக்கு மிகவும் முக்கியமாக அமைந்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தஸூன் சாணக்க 29 ஓட்டங்களையும், பானுக்க ராஜபக்ஷ 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

நமிபியா அணியின் பந்துவீச்சில் பேனாட் ஸ்கொல்ட்ஸ், பென் சிஹோங்கோ, ஜான் பிரைலிங், டேவிட் வீஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த தோல்வி இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. குழு நிலையில் முதலிடத்தை பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆசிய கிண்ண தொடரில் முதற் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது போலவே உலக கிண்ணத்திலும் மோசமான தோல்வியடைந்துள்ளது.

இலங்கை அணி சிறிய அணிகளை இலகுவாக எடுத்துக்கொள்வது இந்த தோல்விக்கு காரணமாக அமையலாம். ஆனாலும் நமிபியா அணி மிகவும் சிறப்பாக விளையாடியமை அவர்களது வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

இன்று அடுத்த போட்டி நெதர்லாண்ட்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

இந்த வெற்றி நமிபியா அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அணி விபரம்

இலங்கை

1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 தனஞ்சய சி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 ப்ரமோட் மதுஷன் 11 டுஸ்மாந்த சமீரா

நமிபியா
1 டிவன் லா கொக், 2 மிக்கேல் வன் லிங்கன், 3 ஸ்டீபன் பார்ட், 4 ஜான் நிக்கல் லொப்டி ஈட்டன், 5 ஜெராட் ஏராஸ்மஸ், 6 ஜான் பிரைலிங், 7 JJ ஸ்மித், 8 டேவிட் வீஸ், 9 ஷேன் க்ரீன், 10 பேனாட் ஸ்கொல்ட்ஸ், 11 பென் சிக்கங்கோ

Social Share

Leave a Reply