நாவலபிட்டியவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணி ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நாவலப்பிட்டிக்கு சென்ற வேளையில் அங்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் காரணமாக நாவலபிட்டியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத பொலிஸார் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். பதட்ட சூழ்நிலையினை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் உள்ளடங்கலாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பேரணி அண்மையில் களுத்துறையில் நடைபெற்றிருந்தது. இவ்வாறான நிலையில் இன்று இரண்டாவது பேரணி முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அழுத்கமகேயினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.