மழையின் விளையாட்டு இலங்கைக்கான வாய்ப்பை திறந்துவிட்டது.

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (26.10) நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் ஒரு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இன்று காலை நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியிலும் மழை காரணமாக டக்வத் லுயிஸ் முறையில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளது போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இந்த போட்டி கைவிடப்பட்டதனால் ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்து அணி 3 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் அணி 1 புள்ளியோடும் காணப்படுகின்றன. இன்றைய முடிவுகள் காரணமாக குழு 01 இற்கான வாய்ப்புகள் சகல அணிகளுக்கும் திறந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலை இனி நடைபெறவுள்ள போட்டிகளுக்கு விறு விறுப்பு தன்மையினை அதிகரிக்கவுள்ளன.

இவ்வாறான நிலையில் நாளை(27.10) குழு 02 இற்கான மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. 6 அணிகளும் மோதவுள்ள நிலையில் மழை போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்தாவிடின் இரண்டாம் சுற்றுக்கள் வாய்ப்புகளுக்குள் அணிகள் அதிகரிப்பை ஏற்படுத்தும். தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு நாளைய போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையவுள்ளன.

காலை 8.30 மணிக்கு தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியும், 12.30 மணிக்கு இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலும், 4.30 மணிக்கு பாகிஸ்தான் சிம்பாவே அணிகளுக்கிடையிலும் நடைபெறவுள்ளது.

புள்ளி பட்டியல்

குழு 1

அணிகள்வி. போவெற்றிதோல்விகைவிடப்பட்ட போட்டிகள்புள்ளிகள்ஓ.ச.வே
நியூசிலாந்து02010001034.450
இலங்கை02010100020.450
இங்கிலாந்து02010100020.239
அயர்லாந்து0201010002-1.169
அவுஸ்திரேலியா0201010002-1.555
ஆப்கானிஸ்தான்0200010100-0.620

Social Share

Leave a Reply