கட்டாரில் நடைபெறும் உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரில் சவுதி அரேபியா அணி ஆர்ஜன்டீனா அணியினை வெற்றி பெற்றுள்ளது. 2-1 என்ற கோல் அடிப்படையில் இந்த வெற்றியினை சவுதி அணி பெற்றுக்கொண்டது.
இம்முறை உலக கிண்ணத்தை வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ள அணியாக ஆர்ஜன்டீனா கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் குழு C இன் பலம் குறைந்த நாடாக கணிப்பிடப்பட்ட சவுதி அணி ஆர்ஜன்டீனா அணிக்கு அதிர்ச்சி வழங்கி வெற்றி பெற்றுள்ளது.
ஆர்ஜன்டீனா அணி முதற் பாதியில் அடித்த நான்கு கோல்கள் ஒப் சைட் கோல்களாக மாறிப்போனது அவர்களுக்கு பாரிய பின்னடைவாக அமைந்தது.
போட்டி ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் கிடைத்த பனால்டியினை கோலாக மெஸ்ஸி மாற்றினார்.
இரண்டாவது பாதி ஆரம்பித்து சிறிது நேரத்தில் சவுதி அரேபியா அணிக்காக சலே அல்ஷெரி சிறப்பான கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். நான்கு நிமிட இடைவெளியில் சலீம் அல்டவ்சரி அடுத்த கோலையும் அடித்து ஆர்ஜன்டீனாவுக்கு அதிர்ச்சி வழங்கினார்.
சவுதி அரேபியா அணியின் கோல் காப்பாளர்ட மிகவும் அபாரமாக செயற்பட்டு பல கோல்களை தடுத்து தனது அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.