கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடரின் குழு C இற்கான போலந்து, மெக்சிகோ அணிகளுக்கிடையிலான போட்டி கோல்களின்றி சமநிலையில் நிறைவடைந்தது.
போலந்து அணியின் தலைவர் முன்னணி வீரர்களில் ஒருவருமான லெவண்டொஸ்கி 58 ஆவது நிமிடத்தில் கிடைத்த பனால்டியினை தவறவிட்டதனால் போலந்து அணி வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தது. மெக்சிகோ அணியின் தலைவர் கிலெர்மோ கோச்சா அந்த பெனால்டியினை தடுத்தார்.
போட்டி ஆரம்பித்தது முதல் சம பல அணிகளாக இரண்டு அணிகளும் கடுமையாக மோதி, கோல்களை பெற முயற்சி பெற்றன. விறு விறுப்பான போட்டியில் இரு அணிகளும் கோல்களை பெற முடியவில்லை.
இன்றைய போட்டிகளில் இரண்டாவது போட்டி கோல்களின்றி நிறைவடைந்துள்ளது.
குழு C இல் சவுதி அரேபியா முதலிடத்தை பெற்றுக்கொண்டது. ஆர்ஜன்டீனா அணியினை வெற்றி பெற்றதற்காக அந்த நாடு நாளைய தினம்(23.11) தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளது.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | சவுதி அரேபியா | 01 | 01 | 00 | 00 | 03 | 01 | 02 | 01 |
| 2 | போலந்து | 01 | 00 | 00 | 01 | 01 | 00 | 00 | 00 |
| 3 | மெக்சிகோ | 01 | 00 | 00 | 01 | 00 | 00 | 00 | 00 |
| 4 | ஆர்ஜன்டீனா | 01 | 00 | 01 | 00 | 00 | -01 | 01 | 02 |