தென் அமெரிக்க நாட்டில் சிறைக்கைதிகள் மற்றும் குழுக்களுக்கிடையான மோதலில் 116 பேர் பலி


ஈகுவெட்டர் எனும் தென் அமெரிக்க நாட்டில் சிறைக்கைதிகளுக்கும் வெளி கும்பலுக்குமிடையே நடைபெற்ற சண்டையில் 116 பேர் இறந்துள்ளதாக அந்த நாட்டின் பொலிஸ் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கப்பட்ட இவ் மோதல் புதன் கிழமைவரை தொடர்ந்ததில் பொலிஸாரால் 24 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து சிறைக்கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு முன்பாக ஒன்று கூடத் தொடங்கியிருந்தனர்.

புதன்கிழமையன்று பொலிஸாரால் ஈகுவட்டர் சிறைச்சாலை கட்டுக்குள் கொண்டுவந்திருந்த போதிலும் குறித்த மோதலில் 116 பேர் வரை மரணமடைந்துள்ளதுடன் 2 பொலிஸ் அலுவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மோதல் மெக்ஷிக்கோ மற்றும் ஈகுவெட்டர் போதைவஸ்து கும்பல்களுக்கிடையே இடம் பெற்றுள்ளதென்றும் மெக்ஷிக்கோ போதைவஸ்து கும்பல் தம்முடைய அதிகாரப்பரவலை அதிகரிக்கும்பொருட்டு இவ்வாறான மோதல் சம்பவங்களை மேற்கொள்வதாக அந்நாட்டு உள்ளுர் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க நாட்டில் சிறைக்கைதிகள் மற்றும் குழுக்களுக்கிடையான மோதலில் 116 பேர் பலி

Social Share

Leave a Reply