31 ஆம் திகதி வரையான சுகாதார கட்டுப்பாடுகள் விபரம்

இன்று ஊரடங்கு தளர்வு அமுலுக்கு வந்துள்ளது. மிகவும் இறுக்கமான முறையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படியில் இரண்டு கட்டங்களாக இந்த கட்டுப்பாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. 15 ஆம் திகதி வரையில் முதற் கட்டமாகவும், 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் இரண்டாம் கட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

முக கவசமின்றி வெளியே வர முற்றாக தடை. தடுப்பூசிகளை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாகாண பயணகட்டுப்பாடு தொடரும். இரவு 10 மணி முதல் 4 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும்.

புகையிரத சேவை நடைபெறாது. பேரூந்து போக்குவரத்துக்கு மாகாணங்களுக்குள் நடைபெறும். பிற மாகாணங்களுக்கு செல்ல முடியாது.

குளிரூட்டி பேருந்து சேவைகள் நடைபெறாது. ஆசனங்களில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க முடியும் .பயணிகள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம்.

உணவகங்கள் 16 ஆம் திகதி முதல் 30 சதவீத இருக்கைகளுடன் கூடுதலான 50 பேருக்கு அனுமதி. வெளியிடமெனில் 60 பேருக்கு அனுமதி. மதுபானம் வழங்க முடியாது. இன்று முதல் உணவு எடுத்து செல்ல அனுமதி.

கடைகளில் 15 ஆம் திகதி வரை 10%, 16 ஆம் திகதிக்கு பின்னர் 20% அனுமதி.

சலூன்களில் முற்பதிவோடு ஒரு நேரத்தில் இருவர் மட்டுமே அனுமதி.

குறைந்த பட்ச ஊழியர்களுடன் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தலைவர்கள் தேவைக்கேற்ப ஊழியர்களை வேலைக்கு அழைக்க வேண்டும்.

சகலவித ஒன்று கூடல்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை தடை.

முன்பள்ளிகள் 50 மாணவர்களோடு திறக்க அனுமதி வழங்கப்பட்டுளளது. தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை திறக்க தடை. பலக்லைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்கள் சுகாதர வழிகாட்டல்களோடு மீண்டும் இயங்கலாம்.

திருமணங்கள் மற்றும் பதிவு திருமணங்களுக்கு 15 ஆம் திகதி வரை 10 பேருக்கு அனுமதி. 16 ஆம் திகதி முதல் 25% சதவீத இருக்கைகளுடன் 50 பேருக்கு மேற்படாமல் நடாத்தலாம். மதுபானம் வழங்க முற்றாக தடை.
மரண சடங்குகள் 24 மணித்தியாளத்துக்கள் நடாத்தப்படவேண்டும். 15 தொடக்கம் 15 பேர் மட்டுமே குறித்த ஒரு நேரப்பகுதியில் அனுமதிக்கப்படுவர்.

வழிபாட்டு தலங்களில் ஒன்று கூடல்கள் எதனையும் செய்ய முடியாது.
திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும்.

உடற்பயிற்சி நிலையங்கள் 15 ஆம் திகதி வரை ஐவரோடும் அதன் பின்னர் 10 பேரோடு செயற்படலாம்.

விளையாட்டு நிகழ்வுகள் 15 ஆம் திகதி வரை தடை. அதன் பின்னர் பார்வையாளர்களின்றி நடாத்தலாம்.

சுகாதார வழிகாட்டல்களோடு பரீட்சைகளை நடாத்தலாம்.

31 ஆம் திகதி வரையான சுகாதார கட்டுப்பாடுகள் விபரம்

Social Share

Leave a Reply