LPL – கொழும்புக்கு எதிராக கண்டி அபார துடுப்பாட்டம்

லங்கா, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(06.12) இரண்டாவது போட்டி கண்டி பல்கொன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையில் ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடிப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி 20 ஓவர்களில் 01 விக்கெட்டை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.

கண்டி அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தமையினால் இந்த ஓட்ட எண்ணிக்கயினை பெறக்கூடியதாக இருந்தது. கண்டியின் சிறந்த ஆரம்பத்துக்கு கொழும்பு களத்தடுப்பாளர்களே காரணம். இலகுவான பிடிகள் பல நழுவ விடப்பட்டமையே இந்த ஆரம்பத்துக்கு காரணமாக அமைந்து.

பிடிகள் நழுவ விடப்பட அன்றே பிளட்சர், பத்தும் நிசங்க நிதானம் கலந்த அதிரடி நிகழ்த்தி ஓட்டங்களை உயர்த்தினர்.

அணி விபரம்

கொழும்பு ஸ்டார்ஸ்

அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, சரித் அசலங்க, ரவி போபரா, டினேஷ் சந்திமால், பென்னி ஹோவல், சீக்குகே பிரசன்னா, டொமினிக் ட்ரேக்ஸ், கீமோ பௌல், முதித்த லக்ஷான், சுரங்க லக்மால்.

கண்டி பல்கொன்ஸ்

வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, பாபியன் அலன், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சகூர் கான், அஷேன் டானியல்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி – நிரோஷன் டிக்வெல்லசீக்குகே பிரசன்னா714182
அன்றே பிளட்சர்  10066113
கார்லோஸ் ப்ராத்வைட்  201320
       
       
       
       
       
       
       
       
உதிரிகள்  06   
ஓவர்  20விக்கெட்  01மொத்தம்199   

பிடி –

பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
அஞ்சலோ மத்தியூஸ்02001800
சுரங்க லக்மால்04002900
டொமினிக் ட்ரேக்ஸ்04003300
கீமோ பௌல்02002600
பென்னி ஹோவல்03003400
முதித்த லக்ஷான்02003300
சீக்குகே பிரசன்னா03002301

Social Share

Leave a Reply