இலங்கைக்கு, வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எடுத்துக்கொண்டு வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நிலைமைக்கு பின்னர் இலங்கைக்குள் வருபவர்கள் கொவிட தடுப்பூசி பெற்றமைக்கான சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும், அதோடு கொவிட் உள்ளவர்கள் வர முடியாது என்ற கட்டுப்பாடும் இலங்கை சுகாதர அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையின் சகல விமான நிலையங்கள், துறுமுகங்கள் ஊடக வருகை தருபவர்களாயினும் இந்த நடைமுறைகளின்றி வருகை தர முடியுமென மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த பின்னர் கொவிட் தொற்று ஏற்பட்டால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில், ஹோட்டலில் அல்லது வைத்தியசாலையில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் எனவும் அதற்கான செலவினங்களை பயணிகளே பொறுப்பேற்க வேண்டுமெனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.