“மன்டோஸ்” சூறாவளி இன்று நள்ளிரவு இலங்கையினை கடந்து வட தமிழ் நாடு பகுதியியான புதுசேரி ஊடாக தென் ஆந்திராவினூடாக புயல் கடந்து செல்லுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து வங்காள விரிகுடாவில் 240 கிலோமீட்டர் தூரத்தில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்தும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடும் மழை நிலவும்.
மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 90 கிலோ மீட்டர் வரையில் காணப்படும் காற்றின் வேகம், கடற் கரை பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீட்டர் ஆக காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில்லில் இருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரை எவரும் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.