இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மிக்கேல் அபில்டன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நியூசிலாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பிலும் இருவரும் பேசியதாக மேலும் அவர் கூறியுள்ளார்.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடாத்துவது தொடர்பிலும், அதன் சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மிக்கேல் அபில்டன், பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரனுடன் இந்த சந்திப்பில் பேசியுள்ளார்.