தொடரும் மின்வெட்டு!

எதிர்வரும் 3 நாட்களுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (13.12) முதல் (16.12 ) திகதி வரை மின்வெட்டு நடைபெறும் என ஆணையம் அறிவித்துள்ளது.

பகல் வேளையில் ஒரு மணி நேரமும், இரவு வேளையில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும் என்று பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அனல் மின் நிலையங்கள் தொடர்பான நெருக்கடி நிலை காரணமாக மின்வெட்டு நேரங்கள் அமுல்படுத்தப்படும் எனவும், மழையின் அளவை அடிப்படையாகக் கொண்டு நீர் மின் நிலையங்கலிலிருந்து பெறப்படும் மின் தேவைக்கேற்ப நிர்வகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply