கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாம் போட்டியில் கொழும்பு ஸ்டார்ட்ஸ் அணி இலகுவான வெற்றியினை பதிவு செய்துள்ளது. தம்புள்ள அணி அடைந்துள்ள மோசமான தோல்வி அவர்களுக்கான வாய்ப்பை குறைத்துள்ளது. இருப்பினும் முழுமையாக இழக்கவில்லை. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கொழும்பு, அல்லது காலி அணிகள் மீதமுள்ள சகல போட்டிகளிலும் தோல்வியடைந்தால் தம்புள்ள அணிக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
தம்புள்ள அணியின் தோல்வியின் காரணமாக யாழ் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. அடுத்த சுற்றுக்கு தெரிவாக கொழும்பு அணிக்கு ஒரு வெற்றியும், காலி அணிக்கு இரண்டு வெற்றிகளும் தேவைப்படுகின்றன. தம்புள்ள அணி மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைந்தால் தற்போதுள்ள நிலையிலேயே அந்த இரு அணிகளும் வாய்ப்புகளை பெற முடியும்.
இன்றைய போட்டியில் 90 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கொழும்பு அணி 11.3 ஓவர்களில் 01 விக்கெட்டை இழந்து 09 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இதில் டிக்வெல்ல முதல் பந்திலேயே ஆட்டமிழந்த போதும் டினேஷ் சந்திமால், சரித் அசலங்க இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி வெற்றியினை இலகுவாக்கினார்கள்.
முன்னதாக தம்புள்ள அணி துடிப்பாடிய வேளையில் கஸூன் ரஜிதவின் அபாரமான ஐந்து விக்கெட் பெறுதி தம்புள்ளை அணியினை சிக்கலுக்கு உள்ளாக்கியது. ஆரம்பம் முதலே கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைய விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறி போனது தம்புள்ள அணி. துடுப்பாட்டத்தில் எவரும் சுட்டிக்காட்டுமளவுக்கு சிறப்பாக துடுப்பாடவில்லை.
தம்புள்ள அணி 13.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| நிரோஷன் டிக்வெல்ல | Bowled | ப்ரமோட் மதுஷான் | 00 | 01 | 0 | 0 |
| டினேஷ் சந்திமால் | 30 | 31 | 3 | 0 | ||
| சரித் அசலங்க | 58 | 35 | 5 | 4 | ||
| அஞ்சலோ மத்தியூஸ் | ||||||
| சீக்குகே பிரசன்ன | ||||||
| டொமினிக் ட்ரேக்ஸ் | ||||||
| பென்னி ஹோவல் | ||||||
| கஸூன் ரஜித | ||||||
| உதிரிகள் | 01 | |||||
| ஓவர் 11.3 | விக்கெட் 01 | மொத்தம் | 90 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ப்ரமோட் மதுஷான் | 02 | 01 | 03 | 01 |
| போல் வன் மீகெறன் | 02 | 00 | 24 | 00 |
| நூர் அஹமட் | 3.3 | 00 | 23 | 00 |
| லஹிரு குமார | 02 | 00 | 08 | 00 |
| சத்துரங்க டி சில்வா | 01 | 00 | 11 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| லசித் க்ரூஸ்புள்ளே | Bowled | கஸூன் ரஜித | 00 | 01 | 0 | 0 |
| ஷெவான் டானியல் | L.B.W | கஸூன் ரஜித | 00 | 03 | 0 | 0 |
| ஜோர்டான் கொக்ஸ் | பிடி – சுரங்க லக்மால் | கஸூன் ரஜித | 16 | 09 | 3 | 0 |
| பானுக்கா ராஜபக்ஷ | பிடி – டினேஷ் சந்திமால் | சுரங்க லக்மால் | 04 | 01 | 1 | 0 |
| ரொம் அபெல் | Bowled | கஸூன் ரஜித | 00 | 02 | 0 | 0 |
| தஸூன் சாணக்க | பிடி – அன்றே பிளட்சர் | ஜெப்ரி வண்டர்சாய் | 20 | 11 | 2 | 2 |
| நூர் அஹமட் | பிடி – நவோட் பரணவித்தாரன | ஜெப்ரி வண்டர்சாய் | 02 | 04 | 0 | 0 |
| சத்துரங்க டி சில்வா | Run Out | 11 | 11 | 1 | 0 | |
| போல் வன் மீகெறன் | பிடி – ரவி போபரா | கஸூன் ரஜித | 00 | 06 | 0 | 0 |
| ப்ரமோட் மதுஷான் | பிடி – சாமிக்க கருணாரட்டன | 23 | 26 | 3 | 0 | |
| லஹிரு குமார | Bowled | ஹரீம் ஜனட் | 01 | 06 | 0 | |
| உதிரிகள் | 12 | |||||
| ஓவர் 13.5 | விக்கெட் 10 | மொத்தம் | 89 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கஸூன் ரஜித | 04 | 00 | 22 | 05 |
| சுரங்க லக்மால் | 03 | 00 | 33 | 03 |
| ஜெப்ரி வண்டர்சாய் | 04 | 00 | 10 | 02 |
| ஹரீம் ஜனட் | 2.5 | 00 | 20 | 01 |
