கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் இறுதி நிகழ்வுகள் இன்று(18.12) நடைபெறவுள்ளன.
இன்று மதியமளவில் தேவாலய பிரார்தனைகளின் பின்னர் நெருக்கமான குடும்ப உறவினர்களுடன் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என டினேஷ் சாப்டரின் சகோதரரும், ஜனசக்தி நிறுவன மற்றும் தமிழ் யூனியன் விளையாட்டு கழக தலைவருமான பிரகாஷ் சாப்டர் தெரிவித்துள்ளார்.
டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் 23 பேரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. அத்தோடு அவர் பயணித்த வழிகளிலுள்ள 20 கண்காணிப்பு கமராக்கள் பார்வையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் 5 அணிகள் கண்காணிப்பு கமராக்களை சோதனையிட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அவருடைய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான விபரங்கள் தொலைபேசி நிறுவனங்களின் உதவியுடன் பெறப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.