யாழ் அணி காலிக்கு கடின இலக்கை நிர்ணயித்தது.

ஜப்னா கிங்ஸ் மற்றும், கோல் க்ளாடியேற்றஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் யாழ் அணி பலமான நிலையில் துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது.

கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது.

யாழ் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். குறிப்பாக அபிப் ஹொசைன் நல்ல முறையில் துடுப்பாடி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

சாதீர சமரவிக்ரம தொடர்ச்சியாக ஓட்டங்களை பெற்று வருகின்றார். திசர பெரேரா அதிரடியாக அடித்தாடி ஓட்டங்களை இன்றும் உயர்த்தினார்.

காலி அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகத நிலையில் பலமான யாழ் அணியினை வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியும் என்ற நிலையில் இந்த கடின இலக்கை பெற போராடவேண்டிய நிலை ஏற்படும்.

யாழ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் அவர்களுக்கு இரண்டாம் இடம் முழுமையாக உறுதியாகிவிடும் என்ற நிலை காணப்படுகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுள்ள குர்பாஸ்பிடி – இமாட் வசீம்நுவான் துஷார231931
அவிஷ்க பெர்னாண்டோபிடி – இப்திகார் அஹமட்நுவான் பிரதீப்181521
அபிப் ஹொசைன்பிடி – – இப்திகார் அஹமட்நுவான் துஷார432741
சதீர சமரவிக்ரமபிடி – தனுக்க டபாரேவஹாப் ரியாஸ்322820
சொஹைப் மலிக்Hit Wicketவஹாப் ரியாஸ்000100
திசர பெரேராபிடி – நுவனிது பெர்னாண்டோவஹாப் ரியாஸ்261340
ஜேம்ஸ் புல்லர்Run Out 020400
டுனித் வெல்லாளகேRun Out 050210
மஹீஸ் தீக்ஷண  100800
விஜயகாந்த விஜயஸ்காந்  010100
       
உதிரிகள்  08   
ஓவர்  20விக்கெட்  07மொத்தம்170   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
இமாட் வசீம்03001800
நுவான் துஷார04003102
வஹாப் ரியாஸ்04003703
நுவான் பிரதீப்03003201
இப்திகார் அஹமட்03002202
லக்ஷன் சன்டகன்03002900
யாழ் அணி காலிக்கு கடின இலக்கை நிர்ணயித்தது.

Social Share

Leave a Reply