எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமை (26.12) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் (25.12) ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (26.12) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Social Share

Leave a Reply