மின்சார கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் அதிக மின் தடையை எதிர்கொள்ள வேண்டுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“கடந்த கால இழப்புகளை சீர்செய்யவே இந்த மின் கட்டண அதிகரிப்பு” என முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்
அவ்வாறு இழப்பை சீர் செய்ய கட்டணம் அதிகரிக்கப்படுமானால் மிக பெரியளவில் அதிகரிப்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையியே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
