பண மோசடியில் ஈடுபட்ட இருவர் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (04.01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
நீதிமன்ற வழக்கு ஒன்றில் 70 பவுண் தங்கத்தை விடுவிக்க முடியும் எனக் கூறி 3,694,000 ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் 13.09.2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (05.01) பெதுருதுடுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், நெல்லியடி பொலிஸாரும் காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.