இன்று (05.01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.201 குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ.4409 ஆகும்.
மேலும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.80 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1770 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 38 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 822 ரூபாவாகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.