ஐ . பி . எல் கிறிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய (03.10) முதலாம் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிளென் மஸ்வெல் 57(33) ஓட்டங்களையும் தேவ்தட் படிகள் 40(38) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் ஷமி 3(4-39) விக்கெட்களையும் மொய்சஸ் ஹென்றிகஸ் 3(4-12) விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங் அகர்வால் 57(42) ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 39(35) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யுஸ்வெந்திரா சஹால் 3(4-29) விக்கெட்களை கைப்பற்றினர். ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இந்த தோல்வியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைவைடைந்துள்ளது. இந்த போட்டியின் நாயகனாக கிளென் மஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார்
இரண்டாம் போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணியின் கேன் வில்லியம்சன் 26(21) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சௌதி 2(4-26) விக்கெட்களையும் சிவம் மாவி 2(4-29) விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 2(4-26) விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸுப்மண் கில் 57(51) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் 2(4-32) விக்கெட்களை கைப்பற்றினர். இந்த போட்டியின் நாயகனாக ஸுப்மண் கில் தெரிவு செய்யப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனக்கான வாய்ப்பை இன்னமும் தக்க வைத்துள்ளது.
இன்று (04/10/2021) டெல்லி கப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
வி . பிரவிக்
தரம் – 03
