முதலில் புனர்வாழ்வு மைத்திற்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகளே என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உத்தேச புனர்வாழ்வு பணியக சட்டமூலம் குறித்து நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாட்டின் இன்றைய இக்கட்டான நிலைக்கு காரணமானவர்களான அரசியல்வாதிகள் அனைவரையும் முதலில் புனர்வாழ்வு மைத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“அமைதி வழி போராட்டங்களை மீண்டும் ஆரம்பித்து, ஊழல் அரசியல்வாதிகளை ஆட்சியில் இருந்து விரட்ட முன்வாருங்கள் என இந்த நாட்டு மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் போராட்டம் என்று சொல்லும்போது 1971 அல்லது 1989 ம் ஆண்டுகளில் நடந்த கிளர்ச்சிகளைக் குறிக்கவில்லை என தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இந்த தேசத்தின் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான அமைதியான போராட்டத்தை மட்டுமே நான் குறிப்பிட்டு சொல்லறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
பிணையில் விடுதலை வழங்கப்பட்ட மறுநாள் பாதாள உலகத்தின் முக்கிய நபரான கஞ்சிபானி இம்ரான் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் வரை சிரேஷ்ட அரச புலனாய்வுத் தலைவர்கள் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.