கென்ட் விளையாட்டுக்கழகம் வருடா வருடம் நடாத்தும் கென்ட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்த வருட தொடர் பெப்ரவரி மாதம் ஹட்டனில் நடைபெறவுள்ளது. 04,05 ஆம் திகதிகளில் முதல் சுற்றுப் போட்டிகளும், 12 ஆம் திகதி இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இறுதி நாள் நிகழ்வுகளில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களும், இந்நாள் வீரர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த தொடரில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்களை கென்ட் விளையாட்டுக் கழகம் கோரியுள்ளது. ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை கையளிக்குமாறு கென்ட் விளையாட்டுக்கழகம் அறிவித்துள்ளது.
வி மீடியா இந்த தொடருக்கனா இணைய வழி ஊடக பங்காளராக இணைந்துள்ளது.
முழுமையான விபரங்கள் கீழுள்ள விளம்பரத்தில் காணப்படுகின்றன.

