ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து ஒரே கூட்டணியில் ஒரு சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
சில தொகுதிகளில் யானை சின்னத்திலும், சில தொகுதிகளில் மொட்டு சினத்திலும், இன்னும் சில தொகுதிகளில் புதிய சின்னம் ஒன்றிலும் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தான் தேர்தல் தொடர்பிலான அரசியலில் ஈடுப்பமாட்டேன் எனவும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை தேர்தல் நடவடிக்கைளில் செயற்படுமாறும் தெரிவித்திருந்தார்.
