இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியா, கொல்கொத்தா ஈடன் கார்டின் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பத்தும் நிஸ்ஸங்க உபாதையடைந்துள்ள நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ சிறப்பாக ஆரம்பித்த போதும் 20(17) ஓட்டங்களோடு வேகமாக ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அறிமுக போட்டியில் துடுப்பாடிய நுவனிது பெர்னாண்டோ, குஷல் மென்டிஸ் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை மேற்கொண்டனர். 34(34) ஓட்டங்களை பெற்ற நிலையில் மென்டிஸ் ஆட்டமிழக்க 73 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் வருவதும் போவதுமாக வீரர்கள் ஆட்டமிழந்தனர். நுவனிது பெர்னாண்டோ தேவையற்ற ஓட்ட முயற்சியினால் 20(63) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
வனிந்து ஹசரங்க அதிரடியாக ஓட்டங்களை பெற்ற போதும் 21(17) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் டுனித் வெல்லாளகே, கஸூன் ரஜித ஆகியோர் 48 ஓட்டங்களை ஒனபதாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றனர். டுனித் வெல்லாளகே 32(34) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ரஜித ஆட்டமிழக்காமல் 17(21) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். சாமிக்க கருணாரட்ன 17(21) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். இருவரும் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள். உம்ரன் மாலிக் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்தியா அணியின் சிறப்பான பந்துவீச்சும், இலங்கை அணியின் நுட்பமற்ற மோசமான துடுப்பாட்டமும் மீண்டும் ஒரு தடவை இந்தியா அணிக்கான வெற்றி வாய்ப்பை வழங்கியுள்ளது.
