ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கண்டி மாவட்டத்தில் 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நேற்று(12.01) கண்டி தேர்தல் செயலகத்தில் கட்டணம் செலுத்தியுள்ளனர்.`
இதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அழுத்கமகே தலைமையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அமைச்சர் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரும் இணைந்திருந்தனர்.
கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.