எதிர்வரும் திங்கட்கிழமை (16.01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 குறுந்தூர ரயில் சேவைகளை ரத்து செய்ய இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
புகையிரத செயற்பாட்டு பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரதான பாதையினூடான 18 ரயில் சேவைகளும், கரையோரப் பாதையினூடான 8 ரயில் சேவைகளும், புத்தளம் ரயில் பாதையினூடான 2 ரயில் சேவைகளும், களனி ரயில் பாதையினூடான 2 ரயில் சேவைகளும் இவ்வாறு ரத்து செய்யப்படவுள்ளன.
இவற்றுள் சில, காலை மற்றும் மாலை அலுவலக நேர ரயில் போக்குவரத்து சேவைகளும் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.