கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ளது!

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 195 ருபாய் முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் கையிருப்பு அதிகரித்துள்ளமையே இந்த விலை குறைப்புக்கு காரணம் எனவும், நீண்ட காலத்திற்கு இதே விலை நீடிக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ளது!

Social Share

Leave a Reply