தினம் ஒரு கிராம்பும் உடலில் நடக்கும் மாற்றமும்!

கிராம்பு சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா வகைகளில் ஒன்று.

நாம் நறுமணப் பொருளாக பயன்படுத்தப்படும் கிராம்பு அடிப்படையில் ஒரு மருத்துவ மூலிகையாகும்.

இதை வெறும் வாயில் மென்று சாப்பிடும்போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கிராம்பை வெறும் வாயில் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பது குறித்து இனி பார்க்கலாம்.

01.சர்க்கரையின் அளவு சீராகும்

இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அதற்கு அடிப்படையான விடயமே கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதுதான். அதில் கிராம்புக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்பட்டு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

02.பல் பிரச்சினைகளை தீர்க்கும்

கிராம்பு பற்களில் உண்டாகும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு. பற்களில் ஏற்படும் வலியை கிராம்பு குறைக்கும்.

பல் வலி, ஈறுகளில் வலி இருந்தால் அந்த இடத்தில் கிராம்பு வைப்பது சிறந்தது. அதேபோல் வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம்

03.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினையை தீர்க்கும்
கிராம்பை உட்கொள்வதால் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகின்றது.

04.எடை இழப்புக்கு உதவும்
கிராம்பில் உள்ள சாறு அதிக கொழுப்பின் காரணமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

கிராம்பை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்பை குறைக்க முடியும்.

தினமும் கிராம்பை உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்!

தினம் ஒரு கிராம்பும் உடலில் நடக்கும் மாற்றமும்!
தினம் ஒரு கிராம்பும் உடலில் நடக்கும் மாற்றமும்!

Social Share

Leave a Reply