சமுத்திராதேவி ரயில் இன்று (23.01) காலை களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பயணிகள் மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.