தமிழ் நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் திகதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அவர்களை நினைவு கூர்ந்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.
அதில்,
“மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்.
கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான்.
தேகங்கள் அணைந்துவிட்டன தீ அப்படியே.
செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு இன்று அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்தித் திணிப்பை எதிர்த்து 1938, 1948 மற்றும் 1965 ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையால் களப்பலியான தோழர்கள் யாவருக்கும் எமது வீரவணக்கம்!

