முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் செயற்பாட்டு முகாமையாளர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (27.01) காலை மாளிகாவத்தை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
விபத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 26 வயதுடைய மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வி. ஜெகநாதன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
பொரளையில் இருந்து வந்த கார், தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் ஒருகொடைவத்தை சந்திக்கு அருகில் அவிசாவளை வீதியை நோக்கிச் செல்வதற்காக சமிஞ்சை விளக்குகள் எரியும் வரை நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் பின்பகுதியில் மோதியுள்ளது.
அந்த மோட்டார் சைக்கிள் சுமார் நாற்பது மீற்றர் முன்னோக்கிச் சரிந்து சென்று போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் உடலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.