இலங்கை வரவுள்ளார் விக்டோரியா நுலண்ட்!

அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இவ்வாண்டு ஜனவரி 28ம் திகதி முதல் பிப்ரவரி 3ம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்வார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, செயலாளர் நுலண்ட் அமெரிக்க-இலங்கை உறவின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளதுடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க ஆதரவை தரும் வகையில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வரவுள்ளார் விக்டோரியா நுலண்ட்!

Social Share

Leave a Reply